brand logo
BestWeb.LK 2024 logo
தம்பி பாதுகாப்பான கைகளில் இருப்பதை உறுதியாக நம்புகிறோம் – டோனியிடம் மதீஷவின் சகோதரி

தம்பி பாதுகாப்பான கைகளில் இருப்பதை உறுதியாக நம்புகிறோம் – டோனியிடம் மதீஷவின் சகோதரி

26 May 2023 | T.Yuwaraj

              

              

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனி மதீஷ பத்திரனவின் குடும்பத்தினரை சந்தித்துள்ளதை மதீஷவின் சகோதரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

நான்கு முறை சம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

 

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர்  மகேந்திர சிங் டோனி எப்போதும் இளம் திறமைகளை வளர்த்து வருகின்றார். அந்த வகையில் இந்த ஆண்டு, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனவை சிறந்த முறையில் வழிநடத்தியுள்ளார்.

 

20 வயது இளைஞரை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிஎஸ்கே அணிக்குள் கொண்டு வந்தவர் டோனி. “பத்திரன ஒரு சிறந்த டெத் பவுலர். மேலும், அவரது பந்துவீச்சு முறையை அவதானிப்பது சற்று கடினம்.. எனவே நீங்கள் அவரை மிகவும் கவனமாக கண்காணிக்க வேண்டும். அதாவது, அந்த கூடுதல் நொடிகளை நீங்கள் பந்தைப் பார்க்கும்போது, அவர் ஒழுக்கமான வேகத்தில் பந்துவீசும்போது, அவரைத் தொடர்ந்து அடிப்பது மிகவும் கடினமாகிவிடும்,” என்று டோனி கூறியிருந்தார்.

 

இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டிக்கு சென்னை அணி தகுதி பெற்றுள்ள நிலையில், இலங்கை இளம் வீரரான மதிஷவின்  குடும்பத்தினரை சந்தித்த போதே டோனி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

"மதிஷவைப் பற்றி நீங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை, அவர் எப்போதும் என்னுடன் இருக்கிறார்" என்று டோனி கூறியபோது மல்லி(தம்பி) பாதுகாப்பான கைகளில் இருப்பதை இப்போது நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” எனடோனி மற்றும் அவர்களது குடும்பத்தினரின் புகைப்படங்களுடன் பத்திரனவின் சகோதரி விசுகா அவரது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

இதற்கிடையில், நான்கு முறை சம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் தகுதிசுற்று 1 இல் குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

 

நடப்பு சம்பியனான குஜராத்  அணி இன்று வெள்ளிக்கிழமை அகமதாபாத்தில் நடைபெறும் தகுதிசுற்று 2ல் எலிமினேட்டரின் வெற்றியாளருடன் விளையாடுவதால், இறுதிப் போட்டிக்கு செல்ல மற்றொரு வாய்ப்பு கிடைக்கும். 



You may also like