மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
19 July 2024 | Rinosharaai
மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
19 July 2024 | Rinosharaai
வலப்பனை மத்துரட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பட்டிகோட பகுதியில் நேற்று வியாழக்கிழமை (18) வீட்டுக்கு அருகில் உள்ள மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் சீரற்ற வானிலையால் வீசிய அதிக காற்றினால் குறித்த மரக்கிளை முறிந்து அந்த நபரின் தலையில் விழுந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மத்துரட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நானுஓயா நிருபர்