ஸ்ரீ ரங்காவுக்கு விளக்கமறியல்
10 days ago
Share on
கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா இன்று (18) கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பதில் நீதவான் ரஞ்சித் சேபால தஹநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கார் விபத்தில் பொலிஸ் சார்ஜென்ட் மரணமடைந்தது தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.