brand logo
BestWeb.LK 2024 logo
வெறுப்புப் பேச்சும் அதன் விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வோடு இருப்போம்!

வெறுப்புப் பேச்சும் அதன் விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வோடு இருப்போம்!

07 April 2024

 வெறுப்பு என்பது நம்மைச் சுற்றி எந்தவிதமான வன்முறையையும் தூண்டும் ஒரு சக்திவாய்ந்த உணர்ச்சியாகும். அந்த உணர்வு மனிதகுலத்தின் தொடக்கத்திலிருந்து இன்றுவரை வன்முறையை விதைத்து வருகிறது.

 

தற்போது, உலகெங்கிலும் உள்ள மக்களிடையே அவநம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் தேசியம் மற்றும் மதத்தின் அடிப்படையில் மோதல்கள் இடம்பெறுகின்றன. சமூக ஊடகங்கள் மற்றும் பிற தொடர்பாடல் தளங்கள் அடிப்படைவாத கருத்துக்களை பரப்புவதற்கு அதிகளவில் பயன்படுத்தப்படுவதை காணமுடிகிறது.

 

இதன் விளைவாக, வெவ்வேறு குழுக்களிடையே ஒருவருக்கொருவருக்கு எதிராக உணர்வுகள் உருவாக்கப்படுகின்றன. இத்தகைய நடைமுறைகள் நம்மைச் சுற்றியுள்ள பல்வேறு குழுக்களிடையே மோதல்களை உருவாக்க உதவுகின்றன.

 

சிலரை மனிதாபிமானத்திற்கு எதிரானவர்கள் என்று அறிமுகப்படுத்தி அதன்மூலம் மற்றவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தவும் இது அடிக்கடி பயன்படுகிறது. வெறுப்புப் பேச்சுதான் எல்லாவற்றின் மையமும் என்பதை அடையாளம் காணமுடிகிறது.

 

வெறுக்கத்தக்க பேச்சு என்றால் என்ன? வெறுக்கத்தக்க பேச்சு என்பது ஒரு நபர் அல்லது குழுவிற்கு எதிராக, குறிப்பாக எந்தவொரு தனிநபருக்கும் எதிராக வெறுப்பை வெளிப்படுத்தும் அல்லது வன்முறையைத் தூண்டும் தகவல்தொடர்பு வடிவமாகும்.

 

இது நபரின் மதம், இனம், பாலினம், பாலியல் நோக்குநிலை, தோற்றம் அல்லது வேறு ஏதேனும் அடையாளப் பண்பு ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கலாம். ஒருவரின் கருத்துகள் மற்றொரு நபருக்கு உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ தீங்கு விளைவித்தால், அதை வெறுப்பு பேச்சு என்று அழைக்கலாம்.

 

ஒருவரின் அறிக்கைகள் இன அல்லது மத வேறுபாடுகளின் அடிப்படையில் மற்றொருவருக்கு எதிராக பாகுபாடு காட்டினால், அதுவும் வெறுப்பூட்டும் பேச்சாகவே கருதப்படுகிறது. ஒருவரின் வார்த்தைகள் அல்லது அறிக்கைகள் பயங்கரவாதம் அல்லது வன்முறை தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக இருந்தால், அத்தகைய வார்த்தைகள் அல்லது அறிக்கைகளை வெறுப்பு பேச்சு என்றும் கூறலாம்.

 

வெறுக்கத்தக்க பேச்சு எதிர்மறையான முன்முடிவுகள் (நீண்ட காலமாக உண்மையாக இருக்கும் பொய்யான உண்மைகள்), பாரபட்சமான உணர்வுகள் மற்றும் அதனால் ஏற்படும் சகிப்புத்தன்மையின்மை ஆகியவற்றில் வேரூன்றியுள்ளது.

 

வெறுப்பு பேச்சு மக்களின் நடத்தை மற்றும் நம்பிக்கைகளை பாதிக்கும் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது.

 

அதனால், உலகம் முழுவதும் வாழும் பல்வேறு சமூகங்கள் இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த காரணத்திற்காக, வெறுப்பு பேச்சு வன்முறை தீவிரவாதத்தின் வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

இணையவெளியில் மக்களை அவமதிப்பதில் இருந்து உடல் ரீதியான துஷ்பிரயோகம், மன ரீதியான துஷ்பிரயோகம், தற்கொலை மற்றும் சுய தீங்குவரை இது இட்டுச் செல்லலாம். இன்று சமூக ஊடகங்கள் வாயிலாக வெறுப்புப் பேச்சு காரணமாக பல்வேறு சம்பவங்கள் அரங்கேறுகின்றன. தாம் சமூக ஊடகங்களில்; யாரோ ஒருவருடைய செயலையோ அல்லது அவரது நடத்தை குறித்தோ பதிவேற்றுகின்ற ஒவ்வொரு விடயங்களிலும் இந்த வெறுப்புப் பேச்சு குறித்து நாம் அவதானிக்கலாம். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த விடயங்களை ஊக்குவிக்கும் அல்லது உதவி செய்யும் ஊடகமாகவே இன்று சமூக ஊடகங்களையும் நாம் பார்க்க முடிகிறது. மாறாக எவ்வளவோ நல்ல பல விடயங்களும் சமூக ஊடகங்கள் மூலமாக நடக்கின்ற போதிலும் வெறுப்புப் பேச்சு கருப்பொருளை மாத்திரம் மையமாக எடுத்துக் கொண்டோமானால் இன்று சகலருக்கும் துணை போகக் கூடிய ஒன்றாகவே சமூக ஊடகங்கள் உள்ளன.

 

வெறுக்கத்தக்க பேச்சு உலகின் ஜனநாயக விழுமியங்களுக்கும், மனித உரிமை பாதுகாப்புக்கும், சமூக ஸ்திரத்தன்மைக்கும், உலக அமைதிக்கும் அச்சுறுத்தல் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. இதற்கு பல்வேறு உதாரணங்களைச் சொல்லலாம். அதில் அண்மைய சம்பவமொன்றை உதாரணமாக பகிர விரும்புகிறேன். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்கள் தெரிவித்த கருத்தானது இன்று இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலும் ஒரு சிறு விரிசலை ஏற்படுத்த விளைகிறது. கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் இல்லத்;தில் இந்தியத் தூதுவர் ஒருவரே தன்னிடம் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் குறித்த விடயத்தை தெரிவித்தார் என்று குறிப்பிட்டுள்ளார். இவரது கருத்து குறித்து விசனமடைந்திருக்கும் இந்தியா இது குறித்து ஆராய இந்திய தூதுவரின் வாசஸ்தல சிசிரிவி காணொளியை பரீட்சித்துப் பார்க்க அனுமதித்ததுடன், இது குறித்த உண்மைத் தன்மையை வெளிப்படுத்த கோரியுள்ளது. இதுவும் வெறுப்பு பேச்சு காரணமாக ஏற்பட்டிருக்கும் முரண்பாட்டுக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

 

உலகில் மனிதகுலத்தை தாங்கி நிற்கும் தூண்கள் படிப்படியாக வலுவிழந்து வருகின்றன என்பது தெளிவாகிறது. வெறுக்கத்தக்க பேச்சும் கருத்துச் சுதந்திரமும் இங்கு பரிசீலிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நபரும், அவரது அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், அவரது நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்த உரிமை இருக்க வேண்டும்.

அதேபோல், வெறுப்புப் பேச்சுக்களில் இருந்து பாதுகாக்கப்படுவதற்கு ஒவ்வொரு நபருக்கும் உரிமை உண்டு. இது ஒரு நபரின் நிலை அல்லது பிற காரணிகளின் அடிப்படையில் மாறுபடாது. கருத்துச் சுதந்திரம் எப்போதும் சமூகப் பொறுப்போடு இணைந்திருப்பதைக் காணலாம். எனவே, சுதந்திரம் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.

 

2018ஆம் ஆண்டில் கண்டியில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்தான் இலங்கையில் வெறுப்புப் பேச்சு காரணமாக ஏற்பட்ட மிகவும் ஆபத்தான நிகழ்வுகளின் தொடராக கருதப்படுகிறது. பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் பங்களிப்புடன் இந்நாட்டில் முன்னெடுக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு எதிரான முதன்மையான வன்முறையாக இது அறியப்படுகிறது.

 

2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், தெல்தெனிய நகரில் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததையடுத்து, சந்தேகத்தின் பேரில் முஸ்லிம் இளைஞர்கள் குழுவொன்று கைதுசெய்யப்பட்டனர்.

 

இந்த சம்பவத்தையடுத்தே, முஸ்லிம்களை குறிவைத்து வெறுப்புப் பேச்சுக்கள் பரவத் தொடங்கியது.

 

“அனைத்து முஸ்லிம்களையும் கொல்லுங்கள்" போன்ற கொடூரமான வெறுப்பு பேச்சுகளை உள்ளடக்கிய வன்முறை, இறுதியில் முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தியது.

 

மேலும் 2019ஆம் ஆண்டில்; ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்குப் பிறகு மற்றும் கோவிட் தொற்றுநோய்களின்போது, முஸ்லிம்களை குறிவைத்து பல வெறுப்பு பேச்சுக்கள் பதிவாகியுள்ளன.

 

அத்துடன், வெறுப்பூட்டும் பேச்சுக்களால் இலங்கையில் அதிகம் பாதிக்கப்பட்ட நபராக குருநாகல் போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனை அடையாளப்படுத்த முடியும்.

இவ்வாறான வெறுக்கத்தக்க கருத்துக்களை வெளியிட்டு சமூகத்தை மோதல்கள் மற்றும் வன்முறைகள் நிறைந்த இடமாக மாற்றும் நபர்களுக்கு எதிராக இலங்கையில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா? இல்லையெனில், இதுபோன்ற செயல்களை சட்டத்தால் தண்டிக்க முடியுமா?

 

பதில் "ஆம்".

அதற்கான தற்போதைய சட்ட விதிகளின் சுருக்கம் கீழே உள்ளது.

 

2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் பிரிவு 3 (ஐஊஊPசு சட்டம்) வெறுப்புப் பேச்சைத் தடுக்கப் பயன்படும் ஒரு முக்கியமான சட்ட விதியாகக் கருதப்படுகிறது.

 

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (ஐஊஊPசு) உறுப்புரை 20 க்கு மிகவும் ஒத்த வகையில் இலங்கை தனது சட்டத்தின் 3 வது பிரிவை உருவாக்கியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள முடியும்.

 

அதன்படி, ஐஊஊPசு சட்டத்தின் பிரிவு 3 (1) வெறுப்பு பேச்சு எவ்வாறு குற்றம் என்று கூறுகிறது.

"எந்தவொரு நபரும் போரை ஊக்குவிக்க அல்லது விரோதம் அல்லது வன்முறைச் செயல்களைத் தூண்டுவதற்கு தேசிய, இன அல்லது மத வெறுப்பைத் தூண்டக்கூடாது."

மேலும், பிரிவு 3 (2) இன் துணைப் பிரிவு (1) இல் தொடர்புடைய குற்றங்களைச் செய்பவர்கள் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளனர்.

(அ) செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளல்

(ஆ) மேற்கொள்வதற்கான உதவியளித்தல்

(இ) செய்வதாக அச்சுறுத்தல் விடுத்தல்

 

இதனால், வெறுப்புப் பேச்சு தொடர்பான குற்றங்களைச் செய்பவர்களை பிடியாணை இன்றி காவல்துறையினால் கைதுசெய்ய முடியும் என்பதுடன், பிணையில் விடுவிக்க முடியாது. (விதிவிலக்கான வழக்குகளில் மேல் நீதிமன்றத்தால் மட்டுமே பிணை வழங்கப்படும்)

குறித்த சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ், அத்தகைய குற்றத்தைச் செய்பவர்களுக்கு எதிராக விதிக்கப்படும் தண்டனைகள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, குற்றத்தில் ஈடுபடும் ஒருவருக்கு 10 ஆண்டுகளுக்கு மிகாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய அதிகாரம் மேல் நீதிமன்றத்துக்கு உள்ளது.

சமூகத்தில் உள்ள மற்றவர்களிடமிருந்து ஒருவர் உண்மையில் எப்படி வித்தியாசமாக இருக்க முடியும்? இந்த விடயத்தில் சமூகத்தில் ஒரு தனி மனிதனாக ஒருவரால் என்ன செய்ய முடியும்? வெறுப்புப் பேச்சு ஏற்கனவே பல உயிர்களை அழித்துவிட்டது.


ஆனால் பெரும்பான்மை சமூகம் ஒன்றுபட்டால் இந்நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர மரியாதையை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருந்தால், மதங்களுக்கு இடையேயான மற்றும் கலாசாரங்களுக்கு இடையிலான உரையாடல்கள் மிகவும் முக்கியமானவையாகும்.

அமைதியான உலகில் வாழ, நாம் மற்றவர்களின் வரலாறு, மரபுகள் மற்றும் ஆன்மீக விழுமியங்களைப் பற்றிய புரிதலை மேம்படுத்த வேண்டும்.


வெறுப்புப் பேச்சுக்கு எதிராக ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் தனிப்பட்ட கருத்துக்களை மரியாதையுடன் வெளிப்படுத்துவது குறித்து இளம் சமூகங்களுக்கு கல்வி கற்பிப்பது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பாகும்.

மேலும், அறிக்கையிடலில் அமைதியை ஏற்படுத்தல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் பணியாற்றுவது ஊடக நிறுவனங்களின் பொறுப்பாகும்.

 

வெறுக்கத்தக்க பேச்சுகளைத் தடை செய்வதற்கும், வெறுக்கத்தக்க பேச்சு தொடர்பான குற்றங்கள் உட்பட இணையத்தில் வெறுப்பூட்டும் பேச்சை எதிர்த்துப் போராடுவதற்கும் பொருத்தமான சட்டத்தை இயற்றுவது அரசாங்கங்களின் பொறுப்பாகும்.


தனிப்பட்ட குறிப்பில், வெறுப்பூட்டும் பேச்சைப் பார்த்தால், அதைத் தெரிவிக்கும் பொறுப்பு அனைத்து மக்களுக்கும் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டலாம்.


மேலும், வெறுப்பூட்டும் பேச்சுகளால் பாதிக்கப்பட்ட ஒருவரை நீங்கள் அறிந்தால், அவர்களுக்கு சரியான ஆதரவை வழங்குவது முக்கியம்.


சமூக ஊடகங்கள் ஒரு நபர் வெறுப்பூட்டும் பேச்சுக்கு ஒரு தளமாக இருக்கலாம். ஆனால் சமூக ஊடகங்களும் வெறுப்புப் பேச்சுக்களை தவிர்த்து கொள்ள முடியும்.


You may also like