கம்பளையில் ATM இயந்திரம் கொள்ளை
3 days ago T.Yuwaraj
Share on
கம்பளையில் உள்ள தனியார் வங்கியொன்றின் ATM இயந்திரத்தில் குறிப்பிடப்படாத தொகையொன்றை திருடர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (24) இரவு 12.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முகமூடி அணிந்த 4 பேர் வேனில் இருந்து வந்து காவலாளியை கட்டி வைத்துவிட்டு ATM இயந்திரத்தை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.