brand logo
ஐதராபாத்தை வீழ்த்தி 78 ஓட்டங்களால் வென்றது சென்னை

ஐதராபாத்தை வீழ்த்தி 78 ஓட்டங்களால் வென்றது சென்னை

28 April 2024



ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.


அதன்படி துடுப்பெடுத்தாட தொடங்கிய சென்னை அணிக்கு ஆரம்ப வீரரான ரஹானே 9 ஓட்டங்களுடன் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடினார்.


டேரில் மிட்செல் மற்றும் கெய்க்வாட் பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்தனர். மிட்செல் 32 பந்துகளில் 52 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சிவம் துபே வழக்கம் போல தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கெய்க்வாட் 54 பந்துகளில் 98 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.


போட்டி முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 212 ஓட்டங்களை குவித்தது. ஐதராபாத் சார்பில் புவனேஷ்வர் குமார், நடராஜன் மற்றும் உனத்கட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.


இதையடுத்து 213 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஐதராபாத் அணி 18.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 134 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.


You may also like