brand logo
BestWeb.LK 2024 logo
சமூக ஊடகர் ஒருவர் அதிரடியாகக் கைது போலித் தகவல்களை பரப்பினாராம்: அமைச்சர் டிரான் தெரிவிப்பு

சமூக ஊடகர் ஒருவர் அதிரடியாகக் கைது போலித் தகவல்களை பரப்பினாராம்: அமைச்சர் டிரான் தெரிவிப்பு

12 February 2024 | Mahendran Dinush Khan

அமைச்சர்கள் உட்பட பல்வேறு நபர்கள் தொடர்பில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தவறான தகவல்களை பரப்பி வரும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாறானவர்களை வழிநடத்துபவர்கள் யார் என்பது எதிர்காலத்தில் தெரியவரும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.


அரசியல்வாதியொருவர் அந்த நபருக்கு டொலர்களில் பணத்தை வழங்கியதாக குறிப்பிட்ட அமைச்சர், பணம் கொடுத்து இவ்வாறான விடயங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.


பாணந்துறையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


கைது செய்யப்பட்ட போது அவரிடம் 04 இலட்சம் ரூபா பணம் இருந்தது. இதற்காகத்தான் சமூக வலைத்தளங்கள்மூலம் அவர் எங்களை அவதூறாகப் பேசி வந்தார். இணையவழி பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இந்த பிரசாரங்கள் ஆட்சியை மாற்றுவதற்கு கூட பயன்படுத்தப்படலாம் என்றும் அமைச்சர் கூறினார்.


You may also like