brand logo
T20  கிரிக்கெட் போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர்

T20 கிரிக்கெட் போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர்

29 March 2023 | Saranyaa Sri

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான T20 கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்றது. 


இதில் ஆப்கானிஸ்தான் அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 


இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான கடைசி T20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 


அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் எடுத்தது. 


ஆப்கானிஸ்தான் தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளும், பாரூக்கி, நபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 


இதனையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 116 ஓட்டத்தில் ஆல்-அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 


ஆட்டநாயகனாக ஷதாப் கான் தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச T20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.



You may also like