brand logo
BestWeb.LK 2024 logo
28 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

28 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

10 July 2024 | Yoshiya

நீர்கொழும்பு பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இன்று அதிகாலை 1.30 மணியலவில் வவுனியா நகரில் வைத்து 28 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


வவுனியா பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து மன்னார் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி கொண்டு செல்லப்பட்ட கூலர்ரக வாகனம் சோதனைக்குட்படுத்தப்பட்டது.


இதன்போது, 28 கிலோ 750 கிராம் கேரள கஞ்சாவை வவுனியா பொலிசார் பறிமுதல் செய்ததுடன், மன்னார் பேசாலை பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 27 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 


சந்தேக நபர்கள் இருவரும் இன்றைய தினம் வவுனியா நீதிமன்றில்  முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.


You may also like