brand logo
ஜப்பானில் தொடர்ந்து பிறப்பு விகிதத்தில் வீழ்ச்சி

ஜப்பானில் தொடர்ந்து பிறப்பு விகிதத்தில் வீழ்ச்சி

04 June 2023 | Saranyaa Sri

ஜப்பானின் பிறப்பு விகிதம் 2022 ஆம் ஆண்டில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக 1.26 ஆக குறைந்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 


அரசாங்கம் பல சலுகைகளை அறிவித்தாலும் குழந்தை பெற்றுக்கொள்வது குறைந்து வருகின்றது. 


இதனால் வரும் 2030-க்குள் ஜப்பானின் மக்கள் தொகை கடும் வீழ்ச்சியடையும் என அஞ்சப்படுகிறது.


125 மில்லியனுக்கும் அதிகமான ஜப்பானின் மக்கள்தொகை 16 ஆண்டுகளாக குறைந்து வருகிறது. 


2070 ஆம் ஆண்டு 87 மில்லியனாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.



You may also like