brand logo
BestWeb.LK 2024 logo
பங்களாதேஷ் போராட்டத்திற்கு காரணமான கட்சிக்குத் தடை!

பங்களாதேஷ் போராட்டத்திற்கு காரணமான கட்சிக்குத் தடை!

01 August 2024 | Rinosharaai

 

பங்களாதேஷில் பல்கலைக்கழக மாணவர்கள் அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சீர்திருத்தம் என்ற பிரச்சினையை முன்வைத்து நடத்திய போராட்டம் இறுதியில் வன்முறையாக மாறி 100 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர்.

 

இச்சம்பவம் தற்போது முடிவுக்கு வந்தநிலையில், இந்த வன்முறைக்கு காரணமான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மாணவர் அமைப்பான இஸ்லாமிக் சதாரா ஷிபிர் என்ற அமைப்பை நாட்டின் நலன் கருதி பங்களாதேஷ் அரசு இன்று தடை செய்துள்ளது.


You may also like