brand logo
சித்தங்கேணி இளைஞன் மரணம் : கொழும்பில் இருந்து விசேட பொலிஸ் குழு

சித்தங்கேணி இளைஞன் மரணம் : கொழும்பில் இருந்து விசேட பொலிஸ் குழு

20 November 2023



வட்டுக்கோட்டை சித்தங்கேணி இளைஞன் மரணம் தொடர்பில் இலங்கைப் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடி கொழும்பில் இருந்து விசேட பொலிஸ் குழு விசாரணைக்காக களம் இறக்கப்படுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிடம் வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் உறுதியளித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், வட்டுக்கோட்டை சம்பவம் தொடர்பில் தனக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும் தான் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.


குறித்த இளைஞனின் மரணம் தொடர்பான விசாரணை நீதியாக இடம்பெற தேவை ஏற்படின் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடி கொழும்பில் இருந்து விசேட பொலிஸ் குழு விசாரணைக்காக அழைக்கப்படும் என தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் மேலும் தெரிவித்தார்.


You may also like