brand logo
24 கிலோ கஞ்சா மீட்பு – 3 பொலிஸார் பணி இடைநிறுத்தம்

24 கிலோ கஞ்சா மீட்பு – 3 பொலிஸார் பணி இடைநிறுத்தம்

7 days ago | T.Yuwaraj

Share on

 பேலியகொட பிரதேசத்தில் 24 கிலோ கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சப்-இன்ஸ்பெக்டர் உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

இடைநிறுத்தம் செய்யப்பட்ட மற்ற இரண்டு அதிகாரிகளில் ஒரு பொலிஸ் சார்ஜென்ட் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 

24 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காரில் தப்பிச் செல்லும் போது கைது செய்ய முயற்சிக்காத காரணத்தினால் இவர்கள்பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

You may also like