brand logo
BestWeb.LK 2024 logo
ஹமாஸ் அரசியல் தலைவர் படுகொலை : பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கைக் குழு கண்டனம்

ஹமாஸ் அரசியல் தலைவர் படுகொலை : பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கைக் குழு கண்டனம்

01 August 2024 | Rinosharaai


ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே நேற்று படுகொலை செய்யப்பட்டதற்கு பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கைக் குழு கண்டனம் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.


ஒரு அறிக்கையை வெளியிட்ட குழு, “ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் ஹனியேவின் கோழைத்தனமான படுகொலையை பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கைக் குழு கடுமையாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் கண்டனம் தெரிவித்துள்ளது.


ஹனியாவை படுகொலை செய்ததன் மூலம், காஸாவில் தனது இனப்படுகொலையை முடிவுக்கு கொண்டு வந்து போர் நிறுத்தத்திற்கு செல்ல இஸ்ரேல் தயாராக இல்லை என்பதை நிரூபித்துள்ளதாக கமிட்டி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.


பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கைக் குழு, பலஸ்தீன மக்களுடன் ஐக்கியமாக இருப்பதாகத் தெரிவித்ததோடு, இஸ்ரேலின் விஸ்தரிப்புவாதத்திற்கு எதிரான அவர்களின் எதிர்ப்பிற்கான தொடர்ச்சியான ஆதரவை மேலும் வலியுறுத்தியது.


இந்த வார தொஆரம்பத்தில் ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மரணத்தை அறிவித்து, காஸாவை ஆளும் குழு, அவரது மரணத்திற்கு இஸ்ரேலைக் குற்றம் சாட்டியது.


You may also like