brand logo
BestWeb.LK 2024 logo
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டி20 குழாம் அறிவிப்பு

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டி20 குழாம் அறிவிப்பு

20 November 2023


அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 ஐ தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


ஹர்திக் பாண்டியா கணுக்கால் காயத்தில் இருந்து இன்னும் குணமடையாத காரணத்தினால் சூர்யகுமார் யாதவ் இந்த போட்டிக்கான இந்திய அணியை வழிநடத்தவுள்ளார்.


அத்தோடு ருதுராஜ் கெய்க்வாட் முதல் மூன்று ஆட்டங்களுக்கு துணை தலைவராக இருப்பார் எனவும் அதன் பின்னர் கடைசி இரண்டு போட்டிகளுக்கான அணியில் சேரும் ஸ்ரேயாஸிடம் பொறுப்பை ஒப்படைப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


உலகக் கிண்ண அணியில் இருந்து, சூர்யகுமார், இஷான் கிஷான் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் மட்டுமே முழு தொடருக்கும் பெயரிடப்பட்டுள்ளனர்.


அதே நேரத்தில் காயத்தினால் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து இருந்து வெளியேற்றப்பட்ட அக்சர் படேல் அணிக்கு திரும்பியுள்ளார். 


இருப்பினும், ஒகஸ்ட் மாதம் அயர்லாந்துடனான டி20 அணியில் இடம்பெற்றிருந்த சஞ்சு சாம்சன் மற்றும் ஷாபாஸ் அஹமட் ஆகியோருக்கு இடமில்லை.


விசாகப்பட்டினத்தில் தொடங்கும் டி20 தொடர் திருவனந்தபுரம் (நவம்பர் 26), கவுகாத்தி (நவம்பர் 28), ராய்ப்பூர் (டிசம்பர் 1), பெங்களூரு (டிசம்பர் 3) ஆகிய இடங்களில் நடைபெறும். 


 இந்திய அணி விவரம் 


சூர்யகுமார் யாதவ் (தலைவர்)

ருதுராஜ் கெய்க்வாட் (துணை தலைவர்)

இஷான் கிஷன் (Wk)

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

திலக் வர்மா

ரின்கு சிங்

ஜிதேஷ் சர்மா (WK)

வாஷிங்டன் சுந்தர்

அக்சர் படேல்

சிவம் துபே

ரவி பிஷ்னோய்

அர்ஷ்தீப் சிங்

பிரசித் கிருஷ்ணா

அவேஷ் கான்

முகேஷ் குமார்

ஷ்ரேயாஸ் ஐயர் (துணை தலைவர், கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்கு மட்டும்)




You may also like