brand logo
மலாவியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 32 பேர் பலி

மலாவியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 32 பேர் பலி

18 March 2023 | Saranyaa Sri

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவியை பிரெட்டி புயல் புரட்டி போட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகின்றது.


இதனால் பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றது. ரோடுகள், பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் போக்கு வரத்து முற்றிலும் முடங்கி விட்டது. 


பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. அங்குள்ள ஒரு மலைக்கிராமத்தில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 


இதில் அங்கிருந்த வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது. இதில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளனர். 18 பேரை காணவில்லை.


இந்த நிலச்சரிவால் அந்த கிராமமே அழிந்து விட்டது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு இருக்கின்றது. 


மலாவி நாட்டை உலுக்கிய புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 326 ஆக உயர்ந்துள்ளது. 


தொடர்ந்து அங்கு மழை பெய்து வருவதால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றது.



You may also like