brand logo
BestWeb.LK 2024 logo
உள்ளாட்சித் தேர்தல் - கடந்த 24 மணி நேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது

உள்ளாட்சித் தேர்தல் - கடந்த 24 மணி நேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது

05 May 2025 | Yowas JJ


இந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கடந்த 24 மணி நேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

நேற்று (04) காலை 6 மணி முதல் இன்று (05) காலை 6 மணி வரை 5 கட்சி ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இதே நேரத்தில், மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று வரை கைது செய்யப்பட்ட மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.

 

குறிப்பிட்ட காலகட்டத்தில் 204 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இதே நேரத்தில், தேர்தல் சட்டங்களை மீறியதற்காக பொலிஸார் காவலில் எடுத்த மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 46 ஆகும்.


You may also like