brand logo
இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் காலமானார்

இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் காலமானார்

08 February 2024 | Mahendran Dinush khan

விசு நடிப்பில் கடந்த 1984ம் ஆண்டு வெளியான 'ஊருக்கு உபதேசம்'படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆனந்த், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஜோடியாக நடித்து 1986இல் வெளியான 'நான் அடிமை இல்லை' படத்துக்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் அவரது இசையில் இடம்பெற்ற 'ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது' ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.


வெற்றி மேல் வெற்றி, காவலன் அவன் கோவலன், ராசாத்தி வரும் நாள், கயிறு, நாணயம் இல்லாத நாணயம், உள்பட 10 தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் கன்னட மொழியில் 180க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.


சென்னை புதுபெருங்களத்தூரில் குடும்பத்துடன் வசித்து வந்த விஜய் ஆனந்த் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம்(06) தனது 71ஆவது வயதில்  காலமானார். சில மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விஜய் ஆனந்த் காலமானார்.

விஜய் ஆனந்த் மறைவுக்கு இசைக்கலைஞர்கள் சங்க தலைவர் தினா உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


You may also like