brand logo
இலங்கை கிரிக்கெட் குழாமில் இருவரின் விசாக்கள் நிராகரிப்பு

இலங்கை கிரிக்கெட் குழாமில் இருவரின் விசாக்கள் நிராகரிப்பு

08 May 2024



அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் இலங்கை தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களுக்கும் இடையில் சிநேகபூர்வ உரையாடலும் இடம்பெற்றது.


இதன்போது இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களும், அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கும் இணைந்து எடுத்த செல்ஃபி புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை கிரிக்கெட் அணியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கான வீசா விண்ணப்பப் பணியின் போது இந்த செல்ஃபி எடுக்கப்பட்டுள்ளது.

 

எனினும், அமெரிக்க தூதரகத்தால் இருவரின் விசாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த தொடரில் அணியுடன் இணைந்து கொள்ளவிருந்த இலங்கை அணி வீரர் ஒருவரினதும், அணி உதவியாளர் ஒருவரினதும் வீசாவே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


You may also like