brand logo
மீள்குடியேற்ற கிராமங்களுக்கு புதிய பஸ் சேவையை ஆரம்பித்து வைத்த அமைச்சர் டக்ளஸ் !

மீள்குடியேற்ற கிராமங்களுக்கு புதிய பஸ் சேவையை ஆரம்பித்து வைத்த அமைச்சர் டக்ளஸ் !

16 April 2024



மீள்குடியேறிய மக்களுக்கான போக்குவரத்து சேவையை இலகுபடுத்தும் வகையில் வலிகாமம் வடக்கு வயாவிளான் திக்கம்புரை ரெயிலர்கடை சந்தியில் இருந்து யாழ் நகருக்கான பஸ் சேவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டடுள்ளது.


கடற்றொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அண்மையில் வயாவிளான் பகுதிக்கு களவிஜயம் மேற்கொண்டபோது, குறித்த பகுதி மக்கள் தமது போக்குவரத்து பிரச்சினைகள் குறித்து எடுத்துக் கூறினர்.


இதுதொடர்பாக அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு அமைய,  வட பிராந்திய போக்குவரத்து சபை அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு இன்றையதினம் (16.04.2924) குறித்த சேவையை முன்னெடுக்க ஏற்பாடு செய்திருந்தது.


இதற்கமையவே இன்று காலை 07 மணியளவில் குறித்த பஸ் சேவையை வைபவ ரீதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்துள்ளார்.


இதேநேரம் குறித்த பஸ் சேவையானது வயாவிளான் சுதந்திரபுரம் ஊடாக வயாவிளான் மத்திய கல்லூரி, ஈழகேசரி பொன்னையா வீதி வழியாக குரும்பசிட்டி, கட்டுவன் சந்தி ஊடாக சென்று தெல்லிப்பளை வைத்தியசாலையை அடைந்து கே.கே.எஸ் வீதி வழியாக யாழ் நகரை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே வறுத்தலைவிளான் சந்தை சந்தி வரையிலான சேவையை தையிட்டி ஆவளைச் சந்தி வரை நீடிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதற்கான ஆரம்ப வைபவமும் இன்றையதினம் காலை 6.30 மணிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




You may also like