brand logo
 சீனாவின் பொருளாதாரம் அசுர வளர்ச்சி

சீனாவின் பொருளாதாரம் அசுர வளர்ச்சி

17 April 2024 | Mahendran Dinush Khan

உலகப் பொருளாதாரத்தில் சீனா 2ஆவது இடத்திலுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்திற்குப் பிறகு சீனாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்தது. தற்போது அதன் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது.


இந்நிலையில் இந்த ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் பொருளாதாரம் 5.3 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. 4.8 சதவீதமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கணித்திருந்த நிலையில், அதையும் தாண்டியுள்ளது. கடந்த காலாண்டு வளர்ச்சியை காட்டிலும் 1.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.


முந்தைய ஆண்டைவிட மார்ச் மாதத்தில் சீனாவில் ஏற்றுமதி 7.5 சதவீதமாக சரிந்துள்ளதாகவும், அதேவேளையில் இறக்குமதியும் குறைந்துள்ளதாகவும் சீனா தெரிவித்திருந்த நிலையில் இந்த சிறந்த தகவல் வெளியாகியுள்ளது.


You may also like