brand logo
பாடசாலை கிரிக்கெட் மேம்பாட்டிற்காக 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - கல்வி அமைச்சர்

பாடசாலை கிரிக்கெட் மேம்பாட்டிற்காக 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - கல்வி அமைச்சர்

28 March 2024 | K.Yoshiya

கல்விப் பொது தராதர சாதாரணத் தர பரீட்சைக்குத் தோற்றிய பின்னர் பெறுபேறுகள் வெளிவருவதற்கு சுமார் 04 மாதங்கள் ஆகும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

 

 இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் கண்டி வித்யார்த்த வித்தியாலய மைதானத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

 

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாவதற்கு முன்னர் உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதன் மூலம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவ குழுக்களை ஒன்றாக இணைத்து செயற்படுத்தப்படும். அதற்கான இடத்தை ஏற்பாடு செய்யும் திறன் அதிபர்களுக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

உயர்தர விஞ்ஞான பாடத்திற்கு 2001 ஆம் ஆண்டு ஆங்கில மொழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் தற்போது ஆறாம் தரம் முதல் உயர்தரம் வரை சுமார் 500 பாடசாலைகளில் ஆங்கில மொழிக் கல்வி கற்பிக்கப்படவேண்டும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியதாகவும் அவர் கூறினார்.

 

மூன்றாண்டு காலம் ஊடகங்கள் மூலம் கற்பித்துவிட்டு சமீபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தற்போது பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அதற்கான பயிற்சிகள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாடசாலை கிரிக்கெட் போட்டிகளை மேம்படுத்துவதற்காக 1500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து பாடசாலை கிரிக்கட் போட்டிகளை மேம்படுத்துவதற்கு செயற்படுமாறு பாடசாலை கிரிக்கெட் சங்கத்திற்கு ஆலோசனை வழங்கினார்.

 

 அரச பாடசாலைகளில் படிக்கும் 41 இலட்சம் மாணவர்களுக்கு சமமான கல்வி வாய்ப்பை வழங்குவது அரசின் பொறுப்பு என்றும், புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் பாடத் திட்டத்தைத் தொகுதிகளுடன் மேம்படுத்தும் திட்டம் அடுத்த தவணையில் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

 

 2025ஆம் ஆண்டு அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் 01, 06, 10ஆம் வகுப்புகளில் இது அறிமுகப்படுத்தப்படும் என்றும், இலவசக் கல்விக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் சிலர் இதனை அரசியலாக்கியுள்ளனர் என்றும் வித்யார்த்த பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் ரஞ்சித் வீரசிங்க கூறினார்.

 

இரண்டரை வருடங்களுக்குள் வித்யார்த்தாவில் இருந்து ஒரு வீரரை தேசிய கிரிக்கட் அணிக்கு அனுப்புவதே பாடசாலையின் நோக்கமாகும் எனவும், அதற்காக இந்த மைதானத்தை புனரமைப்பதாகவும் தெரிவித்தார்.

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, கண்டி மாநகர சபையின் முன்னாள் மேயர் எல்.பி.அலுவிஹாரே, வித்யார்த்த வித்தியாலய அதிபர் எம்.ஆர்.பி. மாயாதுன்னே உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You may also like