brand logo
நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி

16 April 2024



சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மற்றும் நுவரெலியா நானுஓயா பகுதிகளுக்கு சுற்றுலா சென்றவர்கள் மீண்டும் கொழும்பு நோக்கி செல்வதற்கு இன்று (16) முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் பொது மக்கள் ,உள்நாட்டு ,வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பலரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.


எவ்வாறாயினும் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி நோக்கி செல்வதற்காக நானுஓயா ரயில் நிலையத்தில் ஏராளமானவர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது .


பண்டிகை விடுமுறை முடிந்து மீண்டும் தொழில் நிமிர்த்தம் கொழும்பு திரும்பும் பயணிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் பஸ்கள் இயக்கப்படவில்லை இதனால் நானுஓயா ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டைக்கு செல்வதற்கு அதிகமான பயணிகள் வருகைத்தருவதால் பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மேலும் அதிக பயணிகள் நானுஓயாவிக்கு வருகை காரணமாக ரயில் சேவையினை பயன்படுத்தும் பயணிகள் பாதுகாப்பற்ற வகையில் ரயில் மிதிபலகையில் நின்றவாறு பயணம் செய்தமையை அவதானிக்க முடிந்தது.


நுவரெலியா மற்றும் நானுஓயா உள்ளிட்ட சுற்றுலா பிரதேசங்களில் இருந்து பதுளை எல்ல பகுதியை நோக்கி செல்லதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நானுஓயா ரயில் நிலையத்தில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது .



செ.திவாகரன் டி.சந்ரு



You may also like