brand logo
ஐ.பி.எல். 2024 : லக்னோ அணிக்கு 177 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

ஐ.பி.எல். 2024 : லக்னோ அணிக்கு 177 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

19 April 2024 | Mahendran Dinush Khan

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், லக்னோவில் இன்று(19) நடைபெறும் 34ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸும் மோதி வருகின்றன.


குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற லக்னோ அணி பந்து வீசத் தீர்மானித்தது. 


அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 இழந்து 176 ஓட்டங்களை பெற்றது.


சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக 40 பந்துகளில் 57 ஓட்டங்களை ரவிந்த்ர ஜடேஜா ஆட்டமிழக்காமல் பெற்றதுடன் அஜிங்க்யா ரஹானே 36 ஓட்டங்களையும் மெயின் அலி 30 ஓட்டங்களையும் எம்.எஸ்.தோனி 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.


லக்னோ அணி சார்பில் கே.பாண்டியா அதிகபட்சமாக 02 விக்கெட்களை பெற்றுக்கொடுத்தார்.


இதன்படி, லக்னோ அணிக்கு 177 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


You may also like