brand logo
தோட்டங்களில் தினக்கூலி முறை ஒழிக்கப்பட வேண்டும் – மனோ எம்.பி

தோட்டங்களில் தினக்கூலி முறை ஒழிக்கப்பட வேண்டும் – மனோ எம்.பி

09 May 2024

 

தோட்ட தொழிலாளர் சம்பளம் தொடர்பில் இந்த அரசு இந்த நிமிம்ம் வரை தோல்வி அடைந்து உள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

இன்று சபையில் தொழில் அமைச்சர் மனுஷவை இடைமறித்த மனோ எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.

 

 தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

 

நீங்களும், ஜனாதிபதியும் உங்கள் வர்த்தமானி ஆவண கடதாசியை தூக்கி காட்டி, கொட்டகலையில் "ரூ.1700/=" என்று சூளுரைத்தீர்கள்.


ஆனால், என்ன ஆனது? நீங்கள் சூளுரைத்து வாயை மூட முன் இங்கே கொழும்பில், கம்பனிகாரர்கள் "முடியவே முடியாது" என்று கூறி நீதிமன்றத்துக்கு போகிறார்கள்.


அடுத்தது என்ன? கடந்த 5 வருடங்களாக "இதோ, அதோ, சம்பளம் உயர்வு கிடைக்கிறது" என்று சொல்லி, இது இழுபட்டது. இனியும் இழுபடதான் போகிறது.


தோட்டத்துறையில் "சிஸ்டம் சேஞ்ச்" என்ற முறை மாற்றம் செய்யாமல் அங்கே நிரந்தர தீர்வு ஒருபோதும் காண முடியாது. தோட்டங்களில் தினக்கூலி முறை ஒழிக்கப்பட வேண்டும். என்றார்.


You may also like