brand logo
திடீரென தீப்பிடித்து எரிந்த இராஜாங்க அமைச்சரின் வாகனம்

திடீரென தீப்பிடித்து எரிந்த இராஜாங்க அமைச்சரின் வாகனம்

16 April 2024 | k.yoshiya

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பயணித்த வாகனம் பண்டாரவளை ஹல்பே பகுதியில் இன்று (16) திகதி காலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாகவும், அமைச்சருக்கோ சாரதிக்கோ காயம் ஏற்படவில்லை எனவும் எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இயந்திரக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மஹியங்கனை மற்றும் எல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தாண்டு விழாவில் கலந்து கொண்டு அமைச்சர் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


பண்டாரவளை நகரசபை தீயணைப்பு பிரிவினரும், எல்ல பொலிஸாரும் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதும் வாகனத்தின் முன்பகுதி தீப்பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



You may also like