brand logo
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விசா - குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் விளக்கம்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விசா - குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் விளக்கம்

28 March 2024 | K.Yoshiya

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்குவதற்கு எந்தவொரு நிறுவனமும் நியமிக்கப்படவில்லை என குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

 

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் விசா விண்ணப்பங்களை இணையவழியில் அனுப்புவதில் VFS-IVS GBS குளோபல் நிறுவனம் ஈடுபடும் என்று குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் குறிப்பிட்டார்.

 

இத்திட்டத்தின் மூலம் சுற்றுலாத்துறைக்கு அதிகளவு ஆற்றல் கிடைக்கும் என ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.

 

வருடத்திற்க்கு கிட்டத்தட்ட ஒரு மில்லியன் புதிய சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் இலக்கு இவ்வாறாக நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

 

2025 ஆம் ஆண்டுக்குள் சுமார் முப்பது மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என்று அவர் கூறினார்.

 

சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்குவது என்பது தொடர்பான அனைத்து முடிவுகளும் குடிவரவுத் திணைக்களத்தினால் முன்பு போலவே மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


You may also like