brand logo
கின்னஸ் சாதனை படைத்த ரயில்

கின்னஸ் சாதனை படைத்த ரயில்

29 March 2024 | Mahendran Dinush khan

சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஸ்டாட்லர் நிறுவனம் உருவாக்கிய ஐதரசன் எரிபொருள் பயணிகள் ரயில் 2 நாட்கள் நிற்காமல் பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.


ஸ்டாட்லர் நிறுவனம் தனது ஐதரசன் எரிபொருள் ரயிலை முதன் முதலில் பெர்லினில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் வர்த்தக கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு பல முறை சோதனை நடத்தியது.


இச்சோதனைகளுக்கு பிறகு ஒரு முழு ஐதரசன் டேங்க் மூலம் 1,741 மைல்கள் (2,803 கிலோ மீற்றர்) பயணம் செய்துள்ளது. கடந்த 20ஆம் திகதி மாலை தொடங்கிய இந்த பயணம் இரவு மற்றும் அடுத்த நாள் முழுவதும் என தொடர்ந்து 46 மணி நேரம் இயங்கி முடிவுற்றது.


இதுகுறித்து ஸ்டாட்லர் நிறுவன துணைத் தலைவர் டாக்டர். அன்ஸ்கர் ப்ரோக்மேயர் கூறுகையில், இந்த உலக சாதனையானது எங்கள் ஐதரசன் ரயிலின் சிறந்த செயல் திறனை காட்டுகிறது. இது மகத்தான சாதனையாகும். மற்றொரு உலக சாதனை படைத்ததில் நாங்கள் பெருமை அடைகிறோம் என்றார்.


You may also like