Archives

 • கோட்டாவின் கருத்தை நிராகரித்த காணாமற் போனோரின் உறவுகள் ! - January 23, 2020

    -வன்னி செய்தியாளர் – முல்லைத்தீவு மாவட்டத்தில் 1052 ஆவது நாளாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று (23) ஊடக சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி, ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த அறிக்கையில் காணாமல் ஆக்கப்பட்ட எந்த உறவுகளும் தன்னிடம் இல்லை என்பதையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதளை வழங்குவதாகவும்[…]

 • முல்லைதீவு கொக்கிளாயில் தென்பகுதியை சேர்ந்த மீனவர் சடலமாக மீட்பு ! - January 23, 2020

  -வன்னி செய்தியாளர் – முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய் வில்லுக்குளம் பகுதியில் இன்றையதினம்(23) ஆணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது . தென்பகுதியிலிருந்து வருகைதந்து கொக்கிளாய் பகுதியில் தங்கியிருந்து வாடியொன்றில் உதவியாளராக செயற்பட்டுவந்த மீனவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் . குறித்த நபர் கடந்த நான்குநாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையில் இன்றையதினம் குறித்த வில்லுக்குளத்தில் உருக்குலைந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார் . இந்த சடலத்தை கண்ட சக மீனவர் கிராம[…]

 • நீதிபதி கிஹான் கைது செய்யப்படும் சாத்தியம் ? - January 23, 2020

    பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடிய மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பின்னணியில் அவர் கைது செய்யப்படும் சாத்தியம் எழுந்துள்ளதாக உயர்மட்ட நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேற்படி நீதிபதியை கைதுசெய்வதற்கான பிடியாணையை நீதிமன்றத்தில் பெறுமாறு சட்ட மா அதிபர் திணைக்களம் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதால் எந்நேரத்திலும் நீதிபதி கைது செய்யப்படலாமென அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

 • சம்மாந்துறை வெடிபொருட்கள் மீட்பு – ஒருவர் கைது ! - January 23, 2020

    அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை(22) மாலை கைது செய்யப்பட்டுள்ளார் .கைது செய்யப்பட்ட நபரின் வீட்டிலிருந்தே துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. இதன் போது சம்மாந்துறை சென்னல் கிராமம்-2 எனும் பகுதியில் வசிக்கும் முகம்மது இப்பராஹிம் முகம்மது இர்ஹான்( வயது 40 ) என்பவர் கைது செய்யப்பட்டு தற்போது சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில்[…]

 • ” மைத்திரியை சிறையிலடையுங்கள் ” – ஐ தே க எம்பி கோரிக்கை ! - January 23, 2020

    உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கைது செய்து சிறையிலடைக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது, ”முன்னாள் பாதுகாப்புச் செயலாளரோ அல்லது பொலிஸ் மா அதிபரோஅந்த தாக்குதல்களுக்கு பொறுப்புக்கூர வேண்டியதில்லை.பெஜட் வீதி அரச மாளிகையில் சொகுசாக வாழ்ந்துவரும் முன்னாள் ஜனாதிபதியே[…]

Weekly Archive

Monthly Archive

Yearly Archive