பயங்கரவாத தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு எது தெரியுமா..?
உலகளாவிய ரீதியில் பயங்கரவாத தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஆப்கானிஸ்தான் காணப்படுவதாக பொருளாதாரம் மற்றும் அமைதி அமைப்பு வெளியிட்டுள்ள வருடாந்த உலக பயங்கரவாத குறியீடு பற்றிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு உலகில் நடந்த கடுமையான 20 பயங்கரவாத தாக்குதல்களில் 6 தாக்குதல்கள் அந்நாட்டில் இடம்பெற்றுள்ளதாகவும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்நாட்டின் காபூல் நகரில் பி.டி.15. என்ற இடத்தில் காந்தம் இணைக்கப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று நேற்று (13) வெடிக்க செய்யப்பட்டது. இந்த தாக்குதலில், 2 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்தனர். இதனை காபூல் நகர போலீசார் ட்விட்டர் செய்தியின் ஊடாக உறுதிப்படுத்தியது.
எனினும், இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை.
இதேபோல், ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையம், கிவாஜா ராவாஷ் பகுதி, பி.டி.9 என்ற இடத்தில் உள்ள ஹவாஷினாசி மற்றும் ஜன் அபாத் ஆகிய பகுதிகள் உட்பட காபூல் நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் பல ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.