IPL தொடர் இடைநிறுத்தம்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், முன்னணி வீரர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருவதன் காரணமாக 2021 ஐ.பி.எல் போட்டிகளை மறுஅறிவித்தல்வரை நிறுத்திவைக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பிசிசிஐ) தீர்மானித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று கொல்கத்தா வீரர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் நேற்றைய போட்டி நிறுத்தப்பட்டது.
அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூன்று வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் அடுத்தடுத்து வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது