அமெரிக்கா-கனடா எல்லைகளை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானம்
உலகின் மிக நீண்ட இரு நாட்டு எல்லைப்பகுதியான கனடா-அமெரிக்கா எல்லை வரும் ஜனவரி 21ஆம் தேதிவரை மூடப்படுவதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இரு நாடுகளும் சேர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கடனா பிரதமர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுமார் மூன்று இலட்சம் உயிரிழந்துள்ள நிலையில், அமெரிக்கர்கள் கனடா வருவதன் காரணமாக கனடாவிலும் வைரஸ் வீரியம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.