Breaking news- மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து தடை
தற்போதைய கொவிட் நிலைமையை கருத்திற்கொண்டு இன்று நள்ளிரவு முதல் மே மாதம் 30 வரை அனைத்து மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையை விதிக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும், பொதுமக்கள் ஒன்றுகூடுதல் மற்றும் நிகழ்வுகளுக்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, குறித்த காலப்பகுதியில் வியாபார நிலையங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலானவர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு, கொரோனா நோயாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்படும் பகுதிகளை கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தனிமைப்படுத்துவது தொடர்பிலும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.