BREAKING | இலங்கையில் மீண்டும் ஐ.சி.சி T20 உலகக்கிண்ண தொடர்; 2024 அமெரிக்காவில்
(ஏ. அகீல் சிஹாப்)
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படுகின்ற அடுத்த 8 உலகக்கிண்ண தொடர்களை நடத்துகின்ற நாடுகளின் விபரம் சற்று முன் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரை இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன. கடந்த 2012ஆம் ஆண்டு இலங்கை தனியாக இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரை நடாத்தியது.
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒன்பதாவது ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. மேலும் 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணம் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, அடுத்ததாக நடைபெறவுள்ள ஐ.சி.சி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரானது 2027ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா, சிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.