9 ஆவது நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பான விசேட வர்த்தமானி வௌியீடு
ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி 9 ஆவது நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியால் வௌியிடப்பட்டுள்ள குறித்த வர்த்தமானியில் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 9.30க்கு நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.