8 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்க அணி வெற்றி
இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரின் குழு 1இல் இடம்பெற்ற தென்னாபிரிக்கா மற்றும் மே.இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான போட்டியில் தென்னாபிரிக்க அணி 8 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 18.2 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.