587 பேருக்கு மேல்மாகாணத்தில் ஆசிரியர் நியமனம் – ஜனாதிபதி வழங்கினார் !
மேல் மாகாண ஆசிரியர் நியமனங்களை வழங்கும் வைபவம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (02) கொழும்பு இலங்கை மன்றத்தில் இடம்பெற்றது.
2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்ற மேல் மாகாண ஆசிரியர் சேவையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சையில் தோற்றிய 15,000 விண்ணப்பதாரிகளுள் முதலாம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 587 பேருக்கு இவ்வாறு இன்று ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.
ஆசிரியர் நியமனம் வழங்குதலை அடையாளப்படுத்தும் வகையில் 10 பேருக்கு ஜனாதிபதி நியமனக் கடிதங்களை வழங்கினார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் லசந்த அழகியவன்ன, திலங்க சுமதிபால, மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.எல். முஸம்மில், இசுரு தேவப்பிரிய, காமினி திலக்கசிறி, ரஞ்சித் சோமவங்ச ஆகிய மக்கள் பிரதிநிதிகளும், மேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.ஜீ. விஜயபந்து மற்றும் மேல் மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த வைபவத்தில் பங்குபற்றினர்.