3 தடுப்பூசிகளை பெறுவது கட்டாயமா? சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்
எதிர்வரும் காலங்களில் பூஸ்டர் தடுப்பூசி உள்ளடங்கலாக மூன்று கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றவர்களே பூரண தடுப்பூசி பெற்றவர்களாக அங்கீகரிக்கப்படுவர் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.