2 வாரங்களில் பஞ்சம் வரப்போகிறது – ஆளுங்கட்சி எம் . பி அபாயச்சங்கு
இன்னும் இரண்டு வாரங்களில் வெளிநாட்டு கையிருப்பு பூஜ்ஜியத்திற்கு வருவதால் நாட்டில் கடும் பஞ்சம் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (12) பன்னிப்பிட்டிய வீர மாவத்தையில், ஐக்கிய அரச சேவை சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டு, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அடுத்த சில வாரங்களில் அரசாங்கத்தினால் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க முடியாது என குறிப்பிட்ட விஜேதாச ,
அரசியலமைப்பின் 20வது திருத்தத்தின் பின்னர் பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்களும் ஜனாதிபதியின் அடிமைகளாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஏழு மூளைகளை கொண்ட நிதியமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக சமூகத்தில் பரவி வரும் வதந்திகளின் பிரகாரம் நாட்டை கட்டியெழுப்ப முடியாதா என ஊடகவியலாளர்கள் எம்.பியிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த விஜயதாச ராஜபக்ச, நிதியமைச்சர் ஏழாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதால் அவருக்கு ஏழு மூளைகள் இருப்பதாக கூறப்படக் கூடுமென தெரிவித்தார்.