19 வது அரசியலமைப்பு திருத்தம் ரத்துச் செய்யப்பட மைத்ரி – மஹிந்த கொள்கையளவில் இணக்கம் !
அரசியலமைப்பின் 19 வது திருத்தம் இரத்துச் செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் – எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் கொள்கையளவில் இணக்கம் கண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த வாரம் மேற்படி இருவருக்கும் நடந்த சந்திப்பின்போது இந்த விடயம் தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது.
19 வது திருத்தத்தின் மூலம் பிரதமருக்கும் சபாநாயகருக்கும் தாங்கள் நினைத்தபடி நடந்துகொள்ள கூடுதல் அதிகாரங்கள் கிடைத்திருப்பதால் ஒரே கட்சியை சேர்ந்த இருவர் அந்த பதவிக்கு வரும்போது தேவையற்ற தலையீடுகள் நடப்பதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
இதனால் எதிர்காலத்தில் அதனை நீக்க ஏற்பாடுகளை செய்ய மைத்திரியும் மஹிந்தவும் கொள்கையளவில் இணக்கம் கண்டுள்ளனர்.