1000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது
ஒரு தொகை போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர்கள் இருவரை ரங்கல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்கேத நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, மேலும் 1000 ரூபா போலி நாணயத்தாள்கள் ஐம்பதுடன் சந்தேக மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கைதான இருவரையும் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.