ஹொங்கொங்கிற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை நீக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்
ஹொங்கொங்கிற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை நீக்குவதற்கான உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
முன்னர் பிரித்தானிய கொலனியாக இருந்த ஹொங்கொங் மீது, தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமுல்படுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது ஹொங்கொங், சீனாவிற்குச் சமனாகவே கருதப்படுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.