ஹிருணிக்காவுக்கு எதிரான வழக்கு விசாரணைத் திகதி அறிவிப்பு
இளைஞர் ஒருவரை கடத்திய குற்றச்சாட்டில் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு எதிரான வழக்கிற்கான விசாரணைத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த வழக்கினை எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(24) தீர்மானித்துள்ளது.
அன்றைய தினம் வழக்கின் சாட்சியாளர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான அறிவித்தலை விடுக்கும்படி மேல்நீதிமன்ற நீதிபதி அமல் ரனராஜா உத்தரவிட்டுள்ளார்.