ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து: CCTV காணொளி உள்ளே
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் ரொசல்ல சந்திக்கு அருகில் கெப் வண்டியொன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குளானதில் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் நகரிலுள்ள வங்கியில் ஏ.டி எம். இயந்திரத்தில் பணம் வைப்பிலிட்டு விட்டு கண்டி நோக்கி சென்ற கெப் வண்டி முன்னால் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸை முந்திச்செல்ல முற்பட்ட போது சாரதியின் கட்டுப்பாட்டை மீறி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குளானதாக வட்டவளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .
விபத்து சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவில் பதிவாகியுள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.