ஸ்ரேபிரெனிகா படுகொலைக்கு நெதர்லாந்துக்கும் பொறுப்புண்டு: நீதிமன்றம் தீர்ப்புறுதி
பொஸ்னியாவின் ஸ்ரேபிரெனிகா படுகொலையில் 350 இறப்புகளுக்கு நெதர்லாந்தும் காரணம் என்ற தீர்ப்பை டச்சு உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
நீதிமன்றம் அரசுக்கு 10% பொறுப்பு இருப்பதாகக் அறிவித்துள்ளது.
நெதர்லாந்தின் படையினருக்கு இந்த கொலைகளைத் தடுத்திருக்க முடியும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொஸ்னிய செர்பிய படைகள் 1995 இல் ஸ்ரேப்ரினிகா நகரில் மொத்தம் 8,000 முஸ்லிம் ஆண்களைக் கொன்றன.
அங்கிருந்த ஐ.நா.வின் பாதுகாப்பு வலையத்தை டச்சு படையினரே பாதுகாத்து வந்தனர்.
ஐ.நா அமைதிகாக்கும் படையினரின் பணிகளில் ஏற்படும் தோல்விகளுக்கு ஒரு நாட்டின் அரசு பொறுப்பேற்பதில்லை.
ஆனால் நெதர்லாந்து “மிகக் குறைந்த பொறுப்பை” கொண்டுள்ளது என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.