வெலேசுதாவுடன் தொலைபேசியில் உரையாடிய பொலிஸ் உத்தியோகத்தர்: குரல் பதிவு வௌியானது
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபள் ஜீவக அருண பெரேரா மற்றும் பிரபல போதைப்பொருள் வர்த்தகரான வெலேசுதா என்றழைக்கப்படும் சமந்த குமார, இருவருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்தரையாடலின் குரல் பதிவொன்று நேற்று (06) ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த குரல் பதிவின் மூலப்பிரதி பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பிரதிப் பணிப்பாளர், பொலிஸ் அதிகாரி ஜகத் ரோஹனவினால் விசாரணை ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வெலேசுதாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ள முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள், போதைப்பொருள் தொடர்பில் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் சந்தேகநபர் எனவும் ஜகத் ரோஹன ஆணைக்குழுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த குரல் பதிவின் இறுவெட்டை, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.