வெடிப்புச் சம்பவத்தில் சிறுவன் பலி – மூதூரில் பரிதாபம்
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள இக்பால் பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் ஆட்டுக்கு மரமொன்றில் இலைகுழை வெட்டிக்கொண்டிருந்தபோது நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த மிதிவெடி வெடித்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (12) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த காணியில் யுத்தகாலத்தில் இராணுவத்தினர் படை முகாம் அமைத்து இருந்ததோடு, அதன்பின்னர் குறித்த காணியானது மிதிவெடி அகற்றப்பட்டு சில வருடங்களுக்கு முன்னர் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .
இச்சம்பவத்தில் தோப்பூர் – இக்பால் நகர் பகுதியைச் சேர்ந்த ஹாபீஸ் நளீம் வயது (15) சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
(எப். ஆர். எம். பர்ஹான்)
உயிரிழந்த சிறுவனின் சடலம் தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் .