வீ. ஆனந்தசங்கரிக்கு கொரோனா
தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை (17) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
கட்சி தலைவர் வீ.ஆனந்தசங்கரிக்கு நேற்றைய தினம் இரவு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரை இன்று திங்கட்கிழமை யாழ் போதனா வைத்தியசாலை கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்யைளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
கனகராசா சரவணன்