வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் வேலைத்திட்டம் – தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்
நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாதவர்களின் வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மற்றும் தபால் திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, கீழ் உள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு வட்ஸ்அப் ஊடாக குறுந்தகவல் வழங்குவதன் மூலம் மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.