விரைவில் சந்தைக்கு வரும் கூகுள்வொட்ச் !
‘ஸ்மார்ட்வொட்ச்’ சந்தையில், விரைவில் புதிய போட்டி ஆரம்பமாகப் போகிறது. ‘ஆப்பிள் வொட்ச்சுக்கு’க்கு போட்டியாக, ‘கூகுள்வொட்ச்’ தயாராகி வருகிறது. அனேகமாக, அடுத்த ஆண்டு வசந்த காலத்தில், கூகுள் ஸ்மார்ட்வொட்ச் அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஒக்டோபரில் ‘கூகுள் பிக்ஸல் 6’ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்போது, கூடவே, கூகுள் ஸ்மார்ட்வொட்ச்சும் அறிமுகம் ஆக உள்ளதாக செய்தி பரவியது . இப்போது இது அடுத்த ஆண்டு அறிமுகம் ஆகும் என சொல்லப்படுகிறது.
கூகுளின் இந்த ஸ்மார்ட்வொட்ச்சுக்கு , தற்சமயம் ‘ரோஹன்’ என குறியீட்டு பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆப்பிள் ஸ்மார்ட்வொட்ச்சுடன் மோதுவதற்கு ஏதுவாக, கூகுள் நிறுவனம் ஏற்கனவே ‘பிட்பிட்’ பிராண்டை கையகப்படுத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இப்போதைக்கு சந்தையில், ஸ்மார்ட்வொட்ச் விற்பனையில், முதலிடத்தில் ஆப்பிள் ஸ்மார்ட்வொட்ச்ச்சும் , இரண்டாவது இடத்தில் சாம்சங் ஸ்மார்ட்வொட்ச்சும் உள்ளன. கூகுள் ஸ்மார்ட்வொட்ச் வரும்பட்சத்தில் சந்தையில் போட்டி இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.